Happy Valentine's day

 அப்படி வெட்டியா வாழாம இருந்து இன்றுடன் அவனுக்கு அஞ்சு வருஷமாச்சு .


ஆனா இந்த valentine day gift shop ah.. தேடி தேடி அலயறானா எல்லாம் அவன் நண்பனுக்காக தான்


" நான் நாளைக்கு reach ஆவேன். ஆனா என் ஆளுட்ட gift கையில வைச்சிருக்கேன்னு.. சொல்லிட்டேன்.. நீ எதுவும் சொதப்பாம வாங்கிரு.. மயிரு.. சொதப்பன்ன.. அப்பறம் "


" தெண்டமா எதுக்கு செலவு பண்ற.. இந்த valentines day.. father day.. mothers day.. வெள்ளகாரன் கண்டுப்புடிச்சது.. இதெல்லாம் பிஸ்னஸ் strategy மச்சான்.. மொத்த ஓரே நாள்ள பொருள்ள.. விக்குற idea.. !"


" டேய் மரியாதையா.. வாங்கிட்டு call pannu "


" கூமுட்ட கட் பண்ணிட்டான்.. "


இரவு 11:45 ஆகிவிட்டது.. எங்கு தேடியும் கடை இல்லை..


கடைசியாக பெட்ரோல் காலியாகி பைக் நின்றது. எதிரில் valentine's gift shop என பளபளவென மின்ன கடை முன் ஒரு பெண் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்..


கடை பளீரென இருந்தாலும் அவள் இருக்கும் இடத்தில் மங்கிய ஓளி தான் இருந்தது. 


படபடவென ரோட்டை கடந்து கடையை நோக்கி போனான்.


Shop Entrance எந்த பக்கம் என தெரியவில்லை . 

தெரிந்தாலும் அவள் பக்கம் தான் போயிருப்பான் 'entrance எந்த பக்கம் ? 'என கேட்க...


" Excuse me.. shop .. entrance.. "


அவள் " hi .. ! "


" Hi.. ! "


" நீங்க எதாவது தேடு றீங்களா... ? ! " என அவள் கேட்க..


 இவனுக்கு ஓன்றும் புரியவில்லை.. அவனும் ஏதோ தொலைத்தவன் போல் முகத்தை மாற்றி.. " இல்லைங்க.!". என திக்கினான்


அவள் பட்டென சிரித்து.. நிமிர.. மண்டைக்கு மேல் இருக்கும் குண்டு பல்பு ஏரிந்தது . தெளிவாக முகம் தெளிய..


அவன் அசந்தான்..


"அது என்னடா பார்த்த வுடனே காதல்...  


 She is something .. yes.. something. 

 I m nothing.. yes i m nothing

If we combine... become anything..

 Finally i m trying to say one thing..

 You are my everything.. my love ... ! 



 யார். அவள் ..!

 என்னை ஈர்ப்பதற்காகவே மணக்கும் பூ அவள்.. ! "


என ஒருதலை காதலனாய் இருக்கும்போது அவன் எழுதிய மொக்க கவிதை எல்லாம் 

 AR Rahman.. tune போட்டு அவன் முன் வாசித்துக் கொண்டு இருப்பது போல் அவன் மண்டையில் ஓடியது.



 பழைய காதலின் முகம் அவளிடத்தில் மின்னலாய் வந்ததோ.. இல்லை அவளை மறக்க இவள் முகம் மின்னாலாய் இருக்கிறதோ.. அவனுக்கு புரியவில்லை..


ஆனால் அவன் எடுத்த முடிவு ஒன்றுதான்..


 நாளையிலிருந்து கடைக்கு முன்னாடி டேரா போட்ற வேண்டியது தான்..


சரி அடுத்தாக என்ன பேசலாம் என அவன் யோசிக்க...


அவளே.. " single ah ? " எனக் கேட்டாள்


நொடியை விடாமல் பதியளித்தான். இவனுக்கு அவள் புதிராகவே இருந்தாள்.


அவள் மறுபடியும் சிரிக்க இவனும் வெட்கமாய் நெளிய எதிரிலிருந்த கண்ணாடி அவன் வெட்கபடுவதை கண்ராவியாக காட்ட.. பட்டென நிறுத்தி நிமிர்ந்தான்.


அவள் சிரித்து சிரித்து‌. மயக்கம் ஆனது கீழே விழப்பார்த்தாள்..


அச்சோ அவள் இடையை.. பிடிக்க .. பதறி வெளியே வந்தார் கடை ஓனர்..


தம்பி தம்பி கீழ விட்றாதீங்க...


" சார்.. நான் எதுவும் பண்ணல "


" பயப்புடாதீங்க... அப்படியே.. அந்த கழுத்து பின்னாடி இருக்கற பட்டன அமுக்குங்க... "


" என்னது பட்டன் ஆ.. ? 


" ஆமா தம்பி.. பேட்டரி டௌன்னு ! நினைக்கறன்"


" என்னையா.. சொல்லற.. இது பொம்மையா.. அப்படி எதுவும்... இடுப்பு கல்லு மாறி இருக்க. !! " என குழப்பத்திற்கு போனான்


" யோவ்.. அத இங்க குடுயா.. கடைய சாத்தர நேரத்துல ராவடி பண்ற " என வெடுக்கேன புடுங்கி உள்ளே கொண்டு போனார் கடை ஓனர்


மெல்ல கடை ஓனரிடம் நெருங்கி.. " அது எப்படி.. சார்.. எனக்கு புரியல.. கொஞ்ச நேரத்துக்கெல்லாம் அசலாவே.. பேசுன.. " அது பொம்மை ஒத்துக் கொள்ள முடியாத அளவுக்கு அவன் புலம்பல் இருந்தது


கடை ஓனர் .. இவனை மேலையும் கீழையும்... பார்த்து.. " single ah.. committed ah ? ! "


" Single .. தான். .. ! "


" எத்தன வருஷமா.. ?! "


" ரொம்ப வருஷமாவே.. "


" அப்படின்னா... அப்படி தான் தெரியும்.. "


" சார்.. அங்க பாருங்க அப்படியே அங்க ஒரு பொண்ணு நீக்கற மாறி .. அப்படியே.. அது பொண்ணு சார்.... அது எப்படி .. ??! அய்யோ.. "


" டேய் தம்பி.. உணர்ச்சி வசத்த கட்டுப்படுத்து.. ! அப்படி அசலா தெரியுதுன்னா.. அது valentine ஓட தொழில் நுணுக்கம்.. ( business strategy ) "


". Valentine ah ..அது யாரு.. ? "


" கடை ஓனரு.. ! அவங்களோட உருவம் தான் தம்பி அந்த பொம்ம"


" அப்படியா.. " என வாயை பிளந்நு " அவுங்கள நான் பார்க்க முடியுமா.. 


" So.. sad.. அவுங்க இறந்துடாங்க.. "


" என்ன.. ஆச்சு .. ?! "


" வயசாச்சு.. 90 வயசு.. தம்பி அந்த பொம்ம அவங்க இளமை பருவத்துல இருந்த உருவம்... தம்பி கடையா சாத்துர நேரமாச்சு.. கொஞ்ச வெளிய போறீங்களா.. "


அவன் தயங்கி தயங்கி வெளியே போனான்.. அவன் மனசு அவனிடம் இல்லை... 


அவ friend ஒரு பக்கம் போன் அடிக்க...


 கடையின் மொத்த விளக்கையும் அனைத்துவிட்டு வெளியே வந்த கடைக்காரர்

  shutter யை குதித்து பிடித்து கீழே இறக்கினார்..


படொரன shutter யை பிடித்தான்..


கடைக்காரர் கடுப்பாக.. " என்னைய்யா.. .!? "

" அந்த பொம்ம என்ன விலை ? "


Happy valentine's day..










 









Comments

Popular Posts